Prathana Box
நந்த கோகுலத்தில்,பிரதி சனிக்கிழமை ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாம பாராயண கூட்டுப்பிரார்த்தனை கடந்த 12 வருட காலமாக நடைபெற்று வருகிறது.மாலை 6.00 மணியளவில் நடைபெறும் இந்த பூஜையில்,ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்.ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்தோத்திரம்,ஹரி பஜனைகளுடன் நடைபெற்று வருகிறது.
நந்த கோகுலத்தில் பிரார்த்தனை பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் குறைகளை இந்த பிராத்தனைப் பெட்டியில் எழுதி போட்டு விட்டால், வாரம் ஒரு முறை பிராத்தனைகள் வெளியே எடுக்கப்பட்டு, பகவானின் பாதாவிந்தங்களில் வைத்து சஹஸ்ர நாம அர்ச்சனைகள் செய்யப்படுகிறது. இதன் மூலம் பல பக்தர்களின் தங்கள் குறைகள் நீங்கப் பெற்றுள்ளனர்.
வெளியூரில் இருக்கும் அன்பர்கள் தங்கள் குறைகளை ஒரு பேப்பரில் எழுதி, அதை ஒரு கவரில் வைத்து, கவர் மேலே பிராத்தனை பெட்டி என எழுதி அனுப்பி விட்டால், அந்த பிராத்தனைகள் பிராத்தனை பெட்டியில் சேர்க்கப்பட்டுவிடும். பிராத்தனைகளை யாரும் படிப்பதில்லை.